கம்ப்யூட்டர் பாபாவின் ஆசிரமத்தை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

by Lifestyle Editor
0 comment

கம்ப்யூட்டர் பாபாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்ததால் பாஜக பலிதீர்த்திருக்கிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

மத்திய பிரதேசம் இந்தூரில் செயல்பட்டு வந்தது கம்ப்யூட்டர் பாபா ஆசிரமம். ம.பி.அரசில் அமைச்சராக இருந்த கம்ப்யூட்டர் பாபா, 2018ல் அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அரசில் இருந்து விலகி, காங்கிரசை ஆதரித்து வருகிறார்.

கூர்மையான அறிவும், எந்நேரமும் லேப்டாப் உடன் இருக்கும் அவர் ஈடுபாட்டையும் கொண்டுதான் மக்கள் அவரை கம்ப்யூட்டர் பாபா என்று அழைத்து வருகின்றனர்.

40 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து ஆசிரமம் நடத்தி வந்ததாக கம்ப்யூட்டர் பாபா மீது குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், அவருக்கு அது குறித்து அரசு தரப்பில் இருந்து நோட்டீஷ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்காமல் இருந்ததால், ஆசிரமத்தை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் தங்களது பணியினை செய்யவிடமால் தடுத்ததாக கம்ப்யூட்டர் பாபா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்ததால்தான் பழிவாங்கும் நடவடிக்கையாக பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்கிறது கம்ப்யூட்டர் பாபா ஆசிரம வட்டாரம்.

Related Posts

Leave a Comment