சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர் குறைவு..

by Lifestyle Editor
0 comment

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 204862 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,43,822 பேராகும். அண்மைக்காலங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வண்ணம் உள்ளது.

மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை பார்த்தோமேயானால் சென்னையில் இன்று 601 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இன்று ஒரே நாளில் 675 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்கள்.

சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். அரியலூரில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 120 பேருக்கும், கோவையில் 205 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 89 பேருக்கும் நாமக்கல்லில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் 102 பேருக்கும் திருவள்ளூரில் 133 பேருக்கும், திருப்பூரில் 119 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 204226 பேருக்கும் கோவையில் 44841 பேருக்கும் செங்கல்பட்டில் 44724 பேருக்கும் கன்னியாகுமரியில் 15079 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Related Posts

Leave a Comment