பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட நன்மைகள்..

by Lifestyle Editor
0 comment

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் குறைந்துள்ளது என்றும், வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது என்றும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 8மணி அளவில் தொலைக்காட்சியில் திடீரென தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று(நவம்பர் 8) நள்ளிரவுக்கு பின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இதன் மூலம் ஒரே நாளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. அத்துடன் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை வங்கியில் செலுத்தி, அதற்கு பதில் புதிய நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார். இதன்படி வங்கியில் செல்லாத நோட்டை செலுத்தி புதிய 2000 நோட்டுகள் மற்றும் ரூ.500 நோட்டுக்களை மக்கள் படிப்படியாக பெற்றுக்கொண்டனர்.

அதேநேரம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்து. இதன் காரணமாக பலர் 100 ரூபாய் நோட்டு கிடைக்காமல் கடுமையாக அவதிப்பட்டனர். பலர் ஏடிஎம் ஏடிஎம்மாக சென்று அவதிக்கு உள்ளாகினர். பணமதிப்பு நடவடிக்கையால் சுமார் 6 மாதங்கள் தொழில்துறையினர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் அதன்பிறகு படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கிட்டத்தட்ட ஓராண்டு வரை பணமதிப்பிழப்பின் தாக்கம் இந்தியாவில் இருந்தது.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிககசப்பான நடவடிக்கையாக கருதப்பட்ட போதிலும், இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று பிரதமர் மோடி அப்போது நம்பிக்கை தெரிவித்தனார். இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து நான்காம் ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி ட்விட்டரில் சில புள்ளி விவரம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் குறைந்துள்ளது என்றும், வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது என்றும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புள்ளி விவர பதிவில், 2015-16ம் ஆண்டில் 16.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது. இந்நிலையில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 3 ஆண்டுகளில் அதாவது 2019-2020ம் ஆண்டில் 28.49லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளது.

.13,000 கோடிக்கும் அதிகமான சுய மதிப்பீட்டு வரி இலக்கு தாக்கல் செய்யப்படாதவர்களால் செலுத்தப்பட்டது., ரூ .10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை டெபாசிட் செய்த 3.04 லட்சம் நபர்களால் அடையாளம் காணப்பட்டனர். இந்த நடவடிக்கை இந்தியாவில் பயங்கரவாதத்தை குறைக்க உதவியது, ஏராளமான கள்ள நோட்டுகள் பணமதிப்பு நடவடிக்கை மூலம் கண்டுபிடிக்கப்பட்டன” என்றார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பிரதமர் மோடியின் கருத்தையே பணமதிப்பிழப்பு விவாகரத்தில் எதிரொலித்தார் மற்றும் பணமதிப்பிழப்பு நாட்டிற்கு எவ்வாறு உதவியது என்பதை எடுத்துரைத்தார். தொடர்ச்சியான ட்வீட்டில், நிர்மலா சீதாராமன் பணமதிப்பிழப்பின் சிறப்பை அடிக்கோடிட்டுக் காட்டினார், மேலும் இது “சிறந்த வரி இணக்கத்திற்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி ஒரு பெரிய உந்துதலுக்கும் வழிவகுத்தது” என்று கூறினார்.

Related Posts

Leave a Comment