நயன்தாராவிற்கு ‘No’ சொன்ன தளபதி விஜய்..

by Lifestyle Editor
0 comment

தமிழில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் விலகிவிட்டார்.

இதன்பின் நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனின் கதையை கேட்க சொல்லி விஜய்யிடம் சிபாரிசு செய்தாராம்.

அதற்கு நடிகர் விஜய் மறுத்துவிட்டாராம். இதனால் நடிகை நயன்தாரா அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இப்படத்தை இயக்க போகிறார் என்று ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியானது.

எதுவாக இருந்தாலும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து வெளிவரவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment