மாங்கல்ய தோஷம், இரு தார தோஷம்

by Lifestyle Editor
0 comment

எனில் மாங்கல்ய தோஷத்திற்கு என்ன செய்யலாம் என்று கேட்டால், அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த சிவ சக்தி ஸ்வரூபமான அந்த திருத்தலத்தில் வருடம் ஒருமுறை சென்று வந்தால் தோஷம் நீங்கும். அர்த்தநாரீஸ்வரர் படத்தையும், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்த திருவுருவப் படத்தையும் வீட்டில் வைத்து வழிபடுவதால் மாங்கல்ய தோஷம் நிவர்த்தி ஆகும். வருடம் தவறாமல் திருப்பதி சென்று வந்தால் இரு தார தோஷம் நிவர்த்தி ஆகும்.

இந்த தோஷ நிவர்த்திக்கும் பரிகாரம் செய்வதானால், ஒருமுறை மட்டுமே செய்தால் போதுமானது அல்ல என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒருமுறை ஆலயம் சென்று வந்து விட்டாலே தோஷம் சரியாகி விட்டது என்பது தவறாகும். சர்ப்ப சாந்தி செய்வதற்கு காலஹஸ்தி சென்றுவர சொன்னால் ஒரு முறை சென்று வந்தால் போதாது. வருடா வருடம் சென்று வழிபட்டு வந்தால் தான் உங்களுடைய தோஷம் உங்களை விட்டு நீங்கும்.

நாக சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு பரிகாரம் செய்யச் சொன்னால் அந்த பரிகாரத்தை மட்டும் செய்து விட்டால் போதாது. அருகில் இருக்கும் புற்று கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவதால் உங்களுடைய பிரச்சினைகள் விரைவாக தீரும். நம்முடைய ஜாதகத்தில் ஒரு தோஷம் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டால், அதற்குரிய பரிகாரத்தைச் உங்களால் முடிந்தவரை முறையாக செய்துவிட்டு பின்னால் அதற்குரிய தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அப்படியே விட்டுவிடாதீர்கள். அதுவே உண்மையான பரிகாரம்.

Related Posts

Leave a Comment