கை, கால், மூட்டு வலியா?

by Lifestyle Editor
0 comment

வயதானவர்களுக்கு மிகப் பெரிய தலைவலியே கை கால், மற்றும் மூட்டு வலிகள்தான். இந்த வலிகளின் உபத்திரவம் பகலில் மட்டுமல்ல. இரவிலும் நம்மைத் தூங்க விடாது.இத்தகைய கை, கால், மூட்டு வலியைப் போக்க ஒரு வகையான ‘ரசம்’ இருக்கிறது இதனைக் குடித்து வந்தால் நாளடைவில் கை, கால், மூட்டு வலியெல்லாம் பஞ்சாகப் பறந்து விடும்.

தேவை:-

கருஞ்சீரகம் 1 கப்,

ஓமம் 3/4 கப்,

சீரகம் 1/2 கப்,

தனியா 1/2 கப்,

வெந்தயம் 1/4 கப்.

செய்முறை:-

கருஞ்சீரகம், ஓமம், சீரகம், தனியா, வெந்தயம் ஆகியவற்றை மிக்சியில் தனித் தனியாக அரைத்து கொண்டு பின்னர் இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைத்து வைத்த பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் பொடி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

1 டம்ளர் அளவுக்கு வற்றியவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

கொதிக்க வைத்த நீரை வடிக்கவும். இதில் பனஞ்சர்க்கரையை கலந்து பருகவும்.

இதனை நாள் தவறாமல் குடித்து வந்தால் கை, கால், மூட்டு, முதுகு போன்ற வலி எல்லாம் பஞ்சாகப் பறந்து போகும்.

Related Posts

Leave a Comment