பெண் நாயை வன்புணர்வு செய்த வாலிபர்

by Lifestyle Editor
0 comment

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியில் ஷோபநாத் சரோஜ் என்ற 30 வயதான வாலிபர் அங்குள்ள ஒரு பெண் நாயை வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டார்

மும்பையிலுள்ள ஓம் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி பிரிஜ் பானுஷாலிக்கு வியாழக்கிழமை பிற்பகல் ஒரு போன் கால் வந்தது .அதில் பேசியவர் முலுண்ட் (மேற்கு) நகரில் உள்ள ஒரு கார் பார்க்கிங் பகுதியில் ஒரு வெள்ளை நிற பெண் நாய்,அங்கிருக்கும் ஒரு தொழிலாளி மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறினார்.அதை கேட்டு அதிர்ந்த அந்த அறக்கட்டளையின் நிர்வாகி பிரிஜ் உடனடியாக அந்த சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்றார்.

அப்போது அந்த இடத்தில் வாய் வீங்கி,ரத்தம் கொட்டும் நிலையில் ஒருபெண் நாய் வலியில் முனகியபடி இருப்பதை கண்டார்.உடனே மருத்துவ பரிசோதனைக்காக பரேலில் உள்ள ஒரு விலங்கு மருத்துவமனைக்கு அந்த நாயை கொண்டு சென்றார்.அந்த நாயை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் அந்த நாய் கடுமையான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்ச்சியடைந்தார்கள்.பின்னர் விலங்குகள் அமைப்புக்கு புகாரளிக்கப்பட்டது.அவரகள் அந்த நாயை வன்புணர்வு செய்த தொழிலாளி ஷோபநாத் சரோஜ்ஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை விலங்குகள் வன் கொடுமை வக்கீல் கைது செய்தார்கள்.

Related Posts

Leave a Comment