டிஜிட்டலில் போதை பொருள் கடத்திய மென்பொறியாளர்

by Lifestyle Editor
0 comment

இந்த ஊரடங்கு நேரத்தில் கடுமையான நிதி சிக்கலிலிருந்த ஒரு மென் பொறியாளர், பல பணக்கார வாலிபர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, நவீன தொழில் நுட்ப்பத்தின் உதவியால் போதை பொருள் கடத்தியதாக பொலிஸாரால் கைது செயப்பட்டார்.

மும்பையில் 25 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் யஷ் ஜி கலானி என்பவர் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இழந்துள்ளதால் அவர் போதை பொருள் கடத்த தொடங்கினார் .அவர் ஒரு ஆப் மூலம் பல வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வார் .பின்னர் அந்த வாடிக்கையளர்களுக்கு கூரியர் மற்றும் தபாலில் பெங்களூரு ,டெல்லி போன்ற இடங்களுக்கு அந்த போதை பொருட்களை அனுப்புவார்.

இப்படியாக அவர் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வந்துள்ளார்.இந்த போதை பொருள் கடத்தல் பற்றி போலீசுக்கு தகவல் வந்தது அதன் பேரில் மும்பை போதை பொருள் போலீசார் அந்த பொறியாளரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள் .
அப்போது அங்கிருந்த அவரின் கூட்டாளி ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் குரு ஜெய்ஸ்வால் என்பவரிடமிருந்து1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள்.பின்னர் அந்த பொறியாளர் யஷ் ஜி கலானி மற்றும் அவரின் கூட்டாளியை போலீசார் கைது செய்தார்கள்.

Related Posts

Leave a Comment