ஹீரோவாக மாறிய வில்லன்…

by Editor
0 comment

நடிகர் சோனு சூட் தனது சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு தொடர்ந்து உதவியுள்ளார், உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இந்த ஊரடங்கில் அவர் செய்த உதவி தாராளம், அதனால் பலனடைந்தோர் ஏராளம். இதனால் சோனு சூட் இந்தியா முழுதும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது அனைத்து திரைதுறைகளிலும் சோனு சூட்டின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சோனுசூட் தனது சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சோனு சூட்டை அணுகிய போது 4 கோடி வரை சம்பளம் கேட்டதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஆரம்பிப்பதற்கு முன் சோனு 2 கோடி தான் சம்பளம் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment