இந்த வாரம் பிக்பாஸ் எலிமினேஷன் யார் ?

by Editor
0 comment

பரபரப்பாக நகர்ந்து வரும் இந்த பிக்பாஸ் சீசனின் முதல் வாரத்தில் நடிகை ரேகா வீட்டைக் காலி செய்தார். இரண்டாவதாக பாடகர் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த வாரம் ஆரி, அனிதா, பாலா, அர்ச்சனா னம், சோம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களில் சனம், சோம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த மூவரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இன்று வெளியான ப்ரோமோ விடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி விறுவிறுப்புடன் சோம் மற்றும் சனம் இருவரின் கைகளை பிடித்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த கமல் போனா மூணு பேரும் ஒன்னா தான் போனும்னு முடிவு பண்ணிட்டிங்களா? என்று கேட்டார்.

சுரேஷ் சக்ரவர்த்தி தான் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இருப்பதாகக் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் சுரேஷ் தான் வெளியேற இருப்பதாக அதிகமானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. எனவே இந்திரஜா சங்கர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment