ராமேஸ்வரம் கடலில் 10 லட்சம் இறால் குஞ்சுகள்

by Editor
0 comment

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீன்வளத்தை பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் இன்று சுமார் 10 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

இதற்காக மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி மையத்தில் பிரத்யேகமாக பொறிக்கப்பட்ட 10 லட்சம் பிளவர் இறால்என்றழைக்கப்படும் தாளை இறால் குஞ்சுகள் இன்று தங்கச்சிமடம் பகுதியில் உள்ள பாக் ஜலசந்தி கடல்பகுதியில் படகு மூலமாக கொண்டு விடப்பட்டது.

இதுகுறித்து பேசிய மண்டபம் மத்திய ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜெயக்குமார், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடியே 7 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த குஞ்சுகள் கடலில் உள்ள தாவரங்களை உட்கொண்டு 3 முதல் 4 மாதங்களில், 10 முதல் 15 கிராம் வரை வளர்ந்து, மீனவர்கள் பிடித்து விற்பனை செய்வதற்கு உண்டான வளர்ச்சியை பெற்று விடுவதாகவும், இதனால், கடலில் இவ்வினம் பெருகுவதுடன் மீனவர்களுடைய வாழ்வாதாரமும் மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment