காவல் நிலையத்தை தூய்மை செய்த காவலர்கள்

by Editor
0 comment

மதுரை

மதுரையில் காவல் நிலையத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட காவலர்களின் செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் சி-2 காவல் நிலையத்தில், இன்று ஆய்வாளர் கலைவாணி தலைமையில் காவலர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி, ஆய்வாளர் அறை, ஆண் மற்றும் பெண் காவலர்கள் ஓய்வு அறைகள், கணினி அறை, நுழைவாயில், பொதுமக்கள் அமருமிடம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தூய்மை செய்தனர்.

காவல் பணி மட்டுமல்ல, தூய்மை பணியும் தங்களுக்கு நன்றாகவே வரும் என்பதை நிரூபிக்கும் விதமாக காவலர்கள் மேற்கொண்ட இந்த செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில், ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து காவலர்களுக்கும், காவல் ஆணையர் வெகுவாக பாராட்டு தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment