கொரோனாவினால் இன்று தமிழகத்தில் 20 பேர் உயிரிழப்பு

by Editor
0 comment

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் இன்று 20 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் புதிதாக இன்று 2334 பேருக்கு தொற்று பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 18.894 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2386 பேர் ஒரேநாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும், தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 85,07,754பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,674 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. 559 பேர் உயிழந்துள்ளனர். இதன்படி கொரொனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்திருக்கிறது.

இதுவரை 78,68,968 பேர் கொரோனா பாதிப்பினால் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரேநாளில் 49, 082 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கிறது மத்திய சுகாதாரத்துறை.

தமிழகத்தில் இதுவரை 7,13,584 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடி பேருக்கு மேல் கொரோன பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 75,384 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று 2,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Related Posts

Leave a Comment