கிழவரின் காம வேட்டையில் கர்ப்பமான 15 வயது சிறுமி

by Lifestyle Editor
0 comment

ஒரு அரசு அதிகாரியின் வீட்டில் வேலை பார்த்த 15 வயது சிறுமியை அந்த அதிகாரியின் மாமனார் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதால் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

புவனேஷ்வர் மாநகராட்சியின் துணை ஆணையர் (பி.எம்.சி) வீட்டில் ஒரு பழங்குடியினத்தை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டு உதவியாளராக வேலை பார்த்து வந்தார் .அப்போது அந்த வீட்டில் அ ந்த அதிகாரியின் 85 வயது மாமனார் மட்டும் தனியாக இருந்துள்ளார் .அந்த பெண் அதிகாரி வேலைக்கு சென்றதும் அந்த பெரியவருக்கு பணிவிடைகள் செய்ய அந்த 15 வயது சிறுமி கூடவே இருந்தார் .
அப்போது அந்த கிழவர் அந்த சிறுமியை கடந்த ஆறு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் அரசு அதிகாரியான தன்னுடைய மருமகளிடம் சொல்லி அவரை ஊரை விட்டே துரத்தி விடுவதாக மிரட்டியுள்ளார் .

அதற்கு பயந்துபோன அந்த சிறுமி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் .இந்நிலையில் அந்த சிறுமி திடீர்ன்னு கர்ப்பமானார் .அதனால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.அங்கு அவரின் தாயாரிடம் தன்னுடைய கர்ப்பத்துக்கு தான் வேலை பார்த்து வந்த வீட்டிலிருக்கும் வயதான பெரியவர்தான் காரணம் என்று அந்த பெண் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தசிறுமியின் தாயார் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் அந்த அரசு அதிகாரியின் மாமனார் மீது பாலியல் வழக்கு பதிவு செய்தார்கள் .மேலும் சிறுமியை வேலைக்கு அமர்த்தியதாக பொலிசார் அந்த அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது, ​​குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை கைது செய்ய அங்குள்ள சமூக அமைப்புகள் ,மற்றும் அரசியல் கட்சியினர் போராடி வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment