ஜப்பானில் நிலநடுக்கம்

by Editor
0 comment

டோக்கியோ :

நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு முதல் நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை ஜப்பானில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள சிச்சிஜிமா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Related Posts

Leave a Comment