ட்ராப் ஆனதா வெற்றிமாறன், சூர்யாவின் வாடிவாசல்..

by Lifestyle Editor
0 comment

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாவிற்கும் படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார்.

அசுரன் படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக வெற்றிமாறனுடன் கைகோர்த்துள்ளார் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று கதாபாத்திரத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் வாடி வாசல் திரைப்படம் ட்ராப்பாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என விசாரித்த நிலையில் தெரியவந்துள்ளது.

வாடி வாசல் திரைப்படம் கொஞ்சம் தாமதாக தான் துவங்கும், ஏனென்றால் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே இன்னும் மற்றொரு படங்களில் கமிட்டாகி இருப்பதால் இப்படம் துவங்க தாமதமாகும் என தகவல்கள் வெளியாகவுள்ளது.

இது சமூக வலைத்தளங்களில் பரவ படம் ட்ராப் என்றே கூறிவருகின்றனர். ஆனால் இது முற்றிலும் வதந்தி தான் என தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment