பிக்பாஸ் 34-ம் நாள்

by Editor
0 comment

சனிக்கிழமை. பஞ்சாயத்து தல கமல்ஹாசன் வரும் நாள். இன்னிக்கு கமலின் பிறந்த நாள்… வாழ்த்துகள் சாரே! இவ்வளவு நாகரிகமாக எந்த மொழியிலும் ஒரு நெறியாளர் பிக்பாஸைக் கொண்டுசென்றிருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். ஓகே. எல்லோரும் பர்த் டே கொண்டாட்ட மனநிலையில்தா இருந்தாங்க. வீட்டுக்கு வெளியே உள்ளே… வாழ்த்துகளைப் பெற்றபடியே கமல் இருக்க, ஆங்காங்கே பிக்பாஸ் காட்சிகள் காட்டப்பட்டன நேற்றைய எப்பிசோட்டில்.

பர்த் டேவுக்கான அசத்தலான டிரெஸ்ஸோடு எண்ட்ரியானார் கமல். ‘எங்கிட்ட பேச மாட்டீங்களா?’என பிக்பாஸிடம் போன சீசனில் கேட்டு பேசினார் கமல். நேற்றோ, ’கமல் சார் பிறந்த நாள் வாழ்த்துகள்’ என பிக்கி சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் என்றால், ட்ரீட் கேட்டு திக்குமுக்காடச் செய்தார். ஆனா, அதுக்கு கமல் சொன்ன பதிலைக் கேட்டு, ‘உனக்கு இது தேவையா?’என வடிவேல் ஸ்டைலில் தன் கண்ணையே தானே குத்திட்டு இருந்திருப்பார் பிக்கி.ஹவுஸ்மேட்ஸ் சூப்பரான கேக் செய்து கமலுக்கு அனுப்பியிருந்தார்கள் ‘உங்கள் அன்பே போதும்’ என கேக்கோடு பிரியாணியையும் அனுப்பினார் கமல்.

கமல் பர்த் டேக்காக பல பாடல்களை இடையிடையே வசனங்கள் சேர்த்து மிக்ஸ் பண்ணி பாடினார்கள். ஆஜித், சுசி, ரம்யா உள்ளிட்டோர் கோரஸாக பாடியதும், பாடல்கள் செலக்‌ஷனும் அருமை. நிஜமாகவே கமல் சர்ப்பரைஸாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.எஸ்.பி.பி ஒவ்வோர் ஆண்டும் தனக்கு வாழ்த்துச் சொல்வதையும் சென்ற ஆண்டு அவர் அனுப்பிய வாய்ஸ் நோட்ஸை ஒலிக்க விட்டார். ஒருநிமிடம் எல்லோரும் உறைந்தார்கள். எஸ்.பி.பி நினைவில் கண்ணீர் சிந்தினார். உண்மையில் ஒரு டிவியில் கமல் – எஸ்.பி.பி இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு புரியும். ‘தம்பி… தம்பி…’ என நூறுமுறை அந்த நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார் எஸ்.பி.பி. கமலுக்கு ரொம்ப பொருத்தமாக எஸ்.பி.பியும் குரல் இருப்பதைப் போல தோன்றும்.

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள்வழக்கமாக, வெள்ளிக்கிழமை காட்சிகள் சுருக்கியே காட்டப்படும். இன்றும் அப்படித்தான், ’காலையில் கன்னீத்தீவு பொண்ணா?’ பாடல் ஒலிக்க, (பாட்டு போடற தம்பிக்கு இன்னிக்கு வீக்லி ஆஃப் போல) வாரத்தில் இறுதிநாளுக்கான உற்சாகத்தில் ஆடினார்கள்.

கேபி – சுரேஷை எதிரெதிரே உட்கார வைத்து பஞ்சாயத்து சொம்பை நிரப்பி வேலையை ஆரம்பிச்சார் ரியோ. சுரேஷின் வீராப்பு நாளுக்கு நாள் குறைஞ்சிட்டே வருவது தெரிஞ்சதுதான். யாராவது சமாதானப் படுத்தினால் ஓகேப்பா… என்ற நிலையில்தான் இருந்தார். அதனால ரியோவுக்கு வேலை அதிக இல்லை.கேக் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அணிகளாகப் பிரிந்து ஆளுக்கொரு பாகம் செய்திருப்பார்கள்போல. இரவு. ‘ஏன் அந்த இடம் கூட்டல’னு ஷிவானியையே மிரட்டிட்டு இருந்தார் ஆரி. கேபி எந்தப் பக்கம் நிக்கறதுன்னு புரியாம, தன்னை தற்காத்துட்டார். ஷிவானிக்கு எதிர்த்து பேச முடியல. தூரத்திலிருந்த பாலா, எழுந்து போலாமா… இல்ல இங்கேயே உட்கார்ந்து வேடிக்கையை மட்டும் பார்ப்போமா… என்று யோசித்துட்டே இருக்க சண்டை முடிஞ்சே போச்சு. (பாசக்கார பொண்ணை ஒரு ஆளு திட்டிட்டு இருக்காரு.. வேடிக்கை பார்க்கிறீங்களே பாஸூ)

சனிக்கிழமைபிக்பாஸ் மேடைக்கு லோகேஷ் கனகராஜூம், அனிருத்தும் வந்திருந்தார்கள். கமலின் புதிய படத்தின் போஸ்டர் டீசர் தயாரானதைப் பற்றி லோகேஷ் ஷேர் பண்ணினார். அனிருத், ‘நீங்க நடிச்ச படங்களை வெச்சு, எவ்வளவு நாள் ஷீட்டிங்கில் இருந்தீங்கன்னு கணக்குப் போட்டோம். 40 வருஷம் இருந்திருக்கீங்க’ என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. கமல் அதெல்லாம் ஒரு மேட்டரா… என்கிற மாதிரி டீல் பண்ணிட்டு இருந்தார். எப்பிசோட் முழுக்கவே வாழ்த்துகளை முழுமையாக ஏத்துக்கிற மனநிலையில் இல்லாதது மாதிரியே இருந்தார் கமல். ஒவ்வொண்ணுக்கும் கவுண்டர் கொடுத்து வாழ்த்தறவங்களுக்கு கொட்டு வெச்சிட்டு இருந்தார்.’விக்ரம்’ பட டைட்டில் டீசரை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு திரையிட்டுக் காட்டினார். உண்மையிலேயே அசத்தலாக இருந்தது டீசர். கமலே சொன்னதுபோல மூன்றாம் தலைமுறையினரின் வொர்க் என்பது ஒவ்வொரு பிரேம்லேயும் தெரிஞ்சது. ஹவுஸ்மேட்ஸ் உற்சாகமாகப் பாராட்டிக்கொண்டிருக்கையில், ‘தெலுங்கு பிக்பாஸ் சூட்டிங்கிலிருந்து நாகார்ஜீனன் லைவ்வில் வந்தார்.

தெலுங்கு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் காட்டப்பட்டது, அவர்களில் எவிக்‌ஷன் லிஸ்ட்டிலிருந்து ஒருவரை கமல் காப்பாற்றியது என பிக்பாஸ் டீம் தீயா வேலை செஞ்சிருக்காங்க.

’டீசர் எப்படி இருந்துச்சு?’ பிக்பாஸ் வீட்டில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் கமல். ரம்யா செம சவுண்டாக விசில் அடித்ததும் கமல் முகத்தில் புன்னகை. அந்த நேரத்தில் இடியோசை கேட்க, ‘வானமும் டீசருக்கு வாழ்த்துனு’ கோர்த்து இழுத்தார்கள் ஹவுஸ்மேட்ஸ். ‘பரவாயில்லையே தேறிட்டீங்க’னு கமல் மனசுக்குள் பாராட்டியிருப்பார்.சுகாசினி, அனுஹாசன் என கமல் ரியல் ஃபேமி சொந்தங்கள் இனையம் வழியே வாழ்த்துகளைச் சொன்னது , ‘வேலை செய்ய விடுங்க’ என பிகு பண்ணிட்டு விடை கொடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகு செம ஃபார்மில் வந்தார் கமல். சரி, பஞ்சாயத்துகளைப் பார்ப்போம் என ஷனமிடம் ஆரம்பிச்சார். ஏகப்பட்டது மனசுல ஓடுதே..’ என மைண்ட் வாய்ஸில் ஓடவிட்டு, ‘எதை சார்’ என்க, ‘உதை’ என ரைமிங்கைப் பிடிச்சார் கமல். ‘தறுதல’ பஞ்சாயத்து ஆரம்பிக்க, சிரித்த பாலாவை அமர்த்தினார். இன்னிக்கு நமக்கு ரவுண்ட் கட்டிடுவார் போல என பாலாவின் முகத்தில் இறுக்கம் வந்துவிட்டது.

‘மேக்கப் போட்டு முகத்தை ரெடி பண்றதைப் போல சபை நாகரீகம்னு இருக்கு. அதை கடைபிடிங்க’னு பாலாவுக்கு ஸ்ட்ராங்க் அட்வைஸினார் கமல். ரெட் கார்டு கொடுத்து அனுப்பனும்னு சோஷியல் மீடியாவில் பலர் கதற, அதுக்காவது கொஞ்சம் திட்டணும்லையா…

தீடிரென்று ஸ்ருதிஹாசனும், அக்‌ஷரா ஹாசனும் ஆன்லைனில் வந்து வாழ்த்துச் சொல்லி, ‘ஹேப்பி பர்த் டே’ பாடலைப் பாடி முடித்ததும், ‘இப்பதான் இந்த ட்யூன் எனக்குப் பிடிக்காது’னு சொல்லி ‘முடித்தார்’ கமல்.அடுத்து சம்யுக்தாவின் கேப்டன்ஷிப் பற்றிய பஞ்சாயத்துக்கு வண்டியைத் திருப்பினார். ‘ஏண்டா… இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டோமோன்னு இருக்கு’ என அங்காலாயத்தார் சம்யுக்தா. பாலாவுக்கு சப்போர்ட்டா இந்த வாரம் முழுக்க அவர் இருந்தது ஊருக்கே தெரியும். ‘பாலாவா… யார் அந்த பையன்… சிவப்பா… கறுப்பா?’ என்பதுபோல புதுசா கேட்டு இருந்தார் சம்யுக்தா.

சம்யுக்தா லீடரானதும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வில்லை. லீடராக்கியவருக்கு ஃபேவரிஸம் காட்டியது.. இந்த இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மறுத்தாலும் அநேகரால் ஏற்றுகொள்ளபட்டது. அதேபோல ஆரியிடம் இருந்த பழைய வஞ்சகம் வெளிகாட்டப்பட்டது.ஆரி மறுபடியும் போன வாரம் விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிக்க, ‘நான் கோபம் பட மாட்டேன்… மாட்டேன்னு சூடாயிட்டார் கமல். ‘நீங்க நல்ல தலைவரா இருந்து காட்டுங்க ஆரி’ என்று சொன்னதும் ‘அதுக்கு வாய்ப்பிருக்கிற மாதிரி தெரியலையே… ஊருக்குள்ள எல்லோர்கிட்டேயும் சண்டையைப் போட்டு வெச்சிருக்கேன்’என்பதுபோல ரியாக்‌ஷன் காட்டினார்.

எவிக்‌ஷனிலிருந்து யாரைக் காப்பாற்றலாம் என அடுத்த விஷயத்துக்கு தாவினார். நாமினேஷனில் உள்ளவர்கள் எழுந்து நிற்க, பிறந்த நாள் என எல்லோரையும் காப்பாற்றிவிடலாமா என்றுகேட்டதும், ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்த வெளிச்சத்தை, சும்மா கேட்டேன் எனச் சொல்லி ஆஃப் பண்ணினார் கமல். எவிக்‌ஷனைப் பற்றி நாளைப் பேசிப்போமே… என்று குழப்பத்துடன் முடித்தார்.நாளை அநேகமாக எவிக்‌ஷன் இருக்காது என்றே பட்சி சொல்லுது. அப்படின்னா, ’இவ்வளவு நாள் ஓட்டுப்போட்ட மக்கள்னா தக்காளி தொக்கா’னு நீங்க கேட்கிறது புரியுது. ஆமாம்னு நேரடியாகச் சொல்ல முடியாது சுத்தி வளைச்சி வேணும்னா அதுவேதான் எனச் சொல்லலாம்.

கோர்ட் பஞ்சாயத்துகள் ஞாயிற்றுக்கிழமை பேசிக்கலாம்னு கமல் சொல்லியிருந்தார். கேப்டன் டாஸ்க்கும் முடிஞ்சிருச்சு. அதனால நிறைய டைம் இருக்கும். பஞ்சாயத்துகள் நீள நீளமாக போவதற்கு நிறைய நிறைய வாய்ப்புகள் இருக்கு மக்களே… எதுக்கும் உஷாரா இருங்க!

Related Posts

Leave a Comment