பிறந்த குழந்தையை சந்தேகப்பட்ட புருஷன்

by Editor
0 comment

ஒரு கல்யாணமான பெண்ணுக்கு பிறந்த குழந்தையை சந்தேகப்பட்டு, டி. என். ஏ.டெஸ்ட் எடுக்க சொன்ன கணவர் மற்றும் மாமியார் மீது ஒரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது .இருவருக்கும் திருமணமான நாள் முதல் வரதட்சணை பிரச்சினை இருந்து வந்துள்ளது .அவரின் மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணின் கணவன் கொடுமைகள் செய்து வந்துள்ளார் .

இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமுற்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் .அதன்பிறகு அவரின் மாமியார் இந்த குழந்தை தன்னுடைய மகனுக்கு பிறக்கவில்லை என்று திட்டிக்கொண்டே இருந்தார் .மேலும் அவரின் கணவரும் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து கொண்டு இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை அதனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டுமென்று கொடுமைகள் செய்துள்ளார் .மேலும் அவரின் நடத்தையில் சந்தேகப்பட்டு ,சில நபர்களுடன் அவரை தொடர்புபடுத்தி பேசி உதைத்துள்ளார் .மேலும் அவரின் மாமியார் அவரின் தந்தையின் வீட்டை தன்னுடைய மகனின் பெயருக்கு மாற்றி தர சொல்லி அவரை வீட்டை விட்டு விரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண் அழுதுகொண்டே தன்னுடைய தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டார் .இதனால் அந்த பெண் தன்னுடைய கணவன் ,மாமியார் மற்றும் அவரின் காதலன் ஆகியோர் உள்பட ஆறு பேர் மீது மகளிர் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment