கல்யாணமான பெண்ணை டார்ச்சர் செய்த வாலிபர்.

by Editor
0 comment

ஒரு கல்யாணமான பெண்ணை ஊடகத்தின் மூலமாகவும் ,வீடியோ கால் மூலமாகவும் பாலியல் தொல்லைகள் கொடுத்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்

மும்பையில் ஒரு 36 வயது பெண் கல்யாணமாகி ,கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் .அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் .அவர் வசிக்கும் அதே பகுதியில் ஒரு 29 வயது வாலிபரும் வசித்து வருகிறார் .அவர் அந்த பெண்ணை வேலைக்கு போகும்போதும் வரும் போதும் கிண்டலும் கேலியும் செய்து வந்துள்ளார் .அதையெல்லாம் அந்த பெண் பொருட்படுத்தாமல் வேளைக்கு போய் வந்துள்ளார் .ஆனால் அந்த வாலிபரின் அட்டகாசம் அதற்கப்புறம் இன்னும் அதிகமானது .

இந்நிலையில் அந்த வாலிபர் சமூக ஊடகத்தில் அந்த பெண்ணின் பெயரில் ஒரு போலியான கணக்கை துவங்கி அதில் ஆபாசமான செய்திகளை அவரின் தோழர்களுக்கும் ,தோழிகளுக்கும் அனுப்பியுள்ளார் .அதை பார்த்த பலர் அந்த பெண்ணிடம் முறையிட்டுள்ளனர் .மேலும் பல நேரங்களின் திடீரென இரவு நேரத்தில் வீடியோ கால் மூலம் அழைப்பார் .அப்போது பேசவில்லையென்றால் மிரட்டுவார் .மேலும் அவரின் கணவரிடம் அவரை பற்றி ஆபாச தகவல்களை கூறுவதாக மிரட்டியுள்ளார் .இப்படி கடந்த 10 மாதத்திற்கும் மேலாக அவரின் பாலியல் டார்ச்சர் தாங்க முடியாமல் அந்த பெண் அங்குள்ள போலீசில் அவர் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தகவல் தொழில் தொழில் நுட்ப உதவியுடன் அவரின் சேட்டைகளை ஆராய்ந்து பார்த்தார்கள் .அதனால் அவரின் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு அவரை விசாரித்து வருகிறார்கள் .

Related Posts

Leave a Comment