‘பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்’

by Editor
0 comment

பள்ளிக்கு செல்ல மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்கிறது. அதன்படி தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துகளை கூறலாம் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்கள் உள்ளனர். பள்ளிகளில் நாளை பாதுகாப்புடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கும் என்றார். பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து கேட்டு அரசு முடிவு எடுக்க உள்ள நிலையில் செங்கோட்டையன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment