முதல்வர் வாழ்த்து! ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு !!

by Editor
0 comment

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பைடனும் நேரடியாக களம் கண்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி கண்டுள்ளார் ஜோ பைடன். இதேபோல் அமெரிக்க துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக

இதேபோல் அமெரிக்க துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாககொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன் துணை அதிபராக கமலா ஹாரிஸுக்கு முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியின் மூலம் தமிழகத்திற்கு கமலா ஹாரிஸ் பெருமை சேர்த்துள்ளார் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment