இளைஞர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பேக்கரி ஓனர்! ஒட்டகப்பாலில் மில்க் ஷேக் வேணும்!

by Lifestyle Editor
0 comment

ஒட்டகப்பாலில் மில்க்க்ஷேக் கேட்டு பேக்கரியை அடித்து உடைத்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

பாண்டிச்சேரியை சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் கடுமையான மதுபோதையில் பாண்டிச்சேரியை அடுத்துள்ள அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நாராயணன் என்பவரின் பேக்கரிக்கு சென்றுள்ளன்னர். பேக்கரிக்குள் வந்த அவர்கள் தங்களுக்கு ஒட்டகப்பாலில் மில்க்க்ஷேக் வேண்டும் என கேட்டு தகராறு செய்துள்ளன்னர்.

கடையில் இருந்தவர்கள் தங்களிடம் ஒட்டகப்பால் இல்லை எனவும், ஒட்டகப்பாலில் இங்கு மில்க்க்ஷேக் கிடைக்காது எனவும் எடுத்து கூறிஉள்ளனர். ஆனால் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்த அந்த மூன்று இளைஞர்களும் பேக்கரியை அடித்து உடைத்தோடு, கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளன்னர்.இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்து சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளன்னர்.

மூன்று இளைஞர்களும் அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவருவதும், மதுபோதையில் அவர்கள் இப்படி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இளைஞர்கள் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment