மிகவும் அழகான மனைவி: விடிய விடிய அருகிலே இருந்து கணவன் செய்த காரியம்

by Web Team
0 comment

கிருஷ்ணகிரியில் மனைவியின் மீது சந்தேகப்பட்ட கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ளது பள்ளசூளகரை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி ருக்மணி.

இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லை, அதுமட்டுமின்றி தங்கராஜ் மனைவி ருக்மணி மிகவும் அழகாக இருந்துள்ளார். இதனாலேயே கணவருக்கு சந்தேகபுத்தி அதிகம் இருந்துள்ளது.

மேலும் தங்கராஜ் அவர்கள் டைலர் கடை நடத்தி வருகிறார், இரவு வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு தான் வருவதுடன் மனைவி ருக்மணியுடன் சண்டையிடுவார்.

இந்த நிலையில் தங்கராஜ் அவர்களின் சம்பாத்தியம் குடும்பம் நடத்த போதாமல் இருந்த காரணத்தால் ருக்மணி ஒரு ஷூ கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதுவும் தங்கராஜ் அவர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. வழக்கம் போலசம்பவத்தன்று சண்டை ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில் ருக்மணி உறங்க சென்றுவிட்டார்.

 

விடிய விடிய உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் அருகே அமர்ந்திருந்த தங்கராஜ் ர் ஒரு கட்டத்தில் அருகில் இருந்த அம்மிக்கல்லைக் கொண்டு ருக்மணியின் தலையில் போட்டு கொன்றுள்ளார்.

இதில் தலை சிதறி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் விரைந்து சென்று தங்கராஜை கைது செய்தனர்.

ருக்மணியின் சடலத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts

Leave a Comment