பொறுப்பில் இருந்து நீக்கிய தளபதி விஜய்: தலைவராக்கிய சந்திரசேகர்! உச்சம் அடைகிறதா மோதல்?

by Web Team
0 comment

தளபதி விஜய் அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கிய நபரை அவரது தந்தை எஸ்.ஏ.சி அவர்கள் அகில இந்தியா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக்கியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் அகில இந்தியா விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கப்பட்டது, இது விஜய் அவர்களின் புதிய கட்சி என பரவலாக பேசப்பட்டது.

ஆனால் இந்த கட்சி தனது சொந்த முயற்சி எனவும், இதற்கும் விஜய் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் எஸ்.ஏ.சி அவர்கள் தெரிவித்தார்.

விஜய் அவர்களும் தனக்கும் என் தந்தையின் கட்சிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை எனவும் எனது ரசிகர்கள், அது என்னோடைய கட்சி என்று தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமின்றி எனது புகைப்படத்தையோ அல்லது நான் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அந்த கட்சியில் இடம்பெற்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் அகில இந்தியா விஜய் மக்கள் இயக்கித்தின் தலைவராக எஸ்.ஏ.சி அவர்கள் பத்மநாபன் என்பவரை நியமித்துள்ளார்.

இவர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட தலைவராக இருந்தவர் என்பதும் பிறகு தளபதி அவர்களால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்மநாபன் எஸ்.ஏ.சி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகன் பொறுப்பில் இருந்து நீக்கியவரை எஸ்.ஏ.சி அவர்கள் தலைவராக்கிய சம்பவம் இருவருக்குமான விரிசலை வலுவடைய செய்ய வாய்ப்புள்ளது.

Related Posts

Leave a Comment