பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் நாமினேஷனில் ஆரி, அனிதா, பாலாஜி, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சோம் சேகர், சுரேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு தனியார் இணைய தளத்தில் நடத்தப்பட்டுவரும் வாக்கெடுப்புகளில் இந்த வாரம் பாலாஜியை விட ஆரிக்கு தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேலும் சோம், சுரேஷ், அர்ச்சனா ஆகிய மூன்று பேருக்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது.
இப்படி ஒரு நிலையில் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உன்மையில் பலரும் இந்த வாரம் அர்ச்சனா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர். அதே போல சுரேஷ் ஒரு வேலை வெளியேறினால் அவரை ரகசிய அறையில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.