“அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்” : ஜோ பைடன்

by Web Team
0 comment

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பைடனும் நேரடியாக களம் கண்டனர். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜோ பைடன் முன்னனிலையில் இருக்கும் நிலையில் ஒரு சில மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால் முடிவுகள் எந்த நேரத்திலும் மாறலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து டிரம்ப்பின் பிரச்சாரக்குழு மறுவாக்குப்பதிவு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிஷகன் உள்ளிட்ட 3 மாகாணங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் அவர் அதிபராகும் வாய்ப்பு அதிகம். அதற்கு தடை போடும் விதமாக தான் டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தகவல் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நமக்கு சாதகமாக உள்ளது. அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்படும் வரை ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ள ஜோ பைடன் வெற்றி பெற இன்னும் 6 வாக்குகளே தேவை என்பது நினைவுகூறத்தக்கது.

Related Posts

Leave a Comment