பரபரப்பாகும் பிக் பாஸ்… கேப்டனாகும் ஆரி! இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா ?

by Web Team
0 comment

கேப்டன் பதவிக்கு நேற்று தங்களுக்கு பிடித்த இரண்டு போட்டியாளர்களை சக போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் செய்தனர்.

இதில் பெரும்பாலோனோர் ஆரி, சோம், நிஷா ஆகியோரை சொல்ல அவர்கள் மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டியிடலாம் என பிக்பாஸ் அறிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி வெற்றி பெற்றார்.

நாமினேஷன் நடைபெற்ற போது பாலாஜி, ரம்யா பாண்டியன், ரியோ ஆகியோரின் பெயர்களும் இதில் அடிபட்டன.

ஷிவானி, சம்யுக்தா இருவரும் பாலாஜியை நாமினேட் செய்ய ரம்யா பாண்டியன் யாரும் எதிர்பாராத விதமாக சோமை நாமினேட் செய்தார்.

முன்னதாக சோம், ரம்யா பாண்டியனை நாமினேட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாரம் யாரு வெளியேறுவார்கள் என்ற கருத்து கணிப்பை போட்டியாளர்கள் கடந்த வாரம் போல ஆரம்பித்துள்ளனர். பார்க்கலாம் இந்த வாரமும் மக்களின் கருத்து கணிப்பு பலிக்குமா என்று.

Related Posts

Leave a Comment