பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்! இனி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் இது தான் கதி

by Web Team
0 comment

புதிய கொரோனா வைரஸ் விதிகள் நடைமுறைக்கு வந்ததால், பிரித்தானியாவில் உள்ள மக்கள் இன்று முதல் நியாயமான காரணமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்தால் 200 பவுண்ட அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை, உடற்பயிற்சி, மருத்துவத் தேவை, உணவு வாங்க அல்லது வேறு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரலாம்.

மற்றப்படி மக்கள் அனைவரும் இன்று முதல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் உள்ளூர் பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் விதிகளை மீறினால் மக்கள் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதவாது விதிகளை மீறுபவர்கள் 200 பவுண்ட் அபராதத்தை எதிர்கொள்வார்கள் மற்றும் அதிகபட்சமாக குற்ற வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள் செலுத்தினால் அபராதம் 100 பவுண்ட் ஆகக் குறைக்கப்படும், ஆனால் மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்களுக்கு 6,400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்பந்து போன்ற விளையாட்டு, போராட்டம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற அளிக்கப்பட்டிருந்த விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

அதாவது இனி இதற்காக வீட்டை விட்டு வெளியேறினாலும் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும்.

Related Posts

Leave a Comment