சரியான நேரம் பார்த்து ட்ரம்பை பழிக்குப் பழி வாங்கிய கிரேட்டா தன்பெர்க்!

by Web Team
0 comment

உங்களுக்கெல்லாம் எவ்வளவு தைரியம் என ஐ.நா சபையில் கர்ஜித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்கை உலகமே வியந்து பார்த்த நேரத்தில், அவரை அலட்சியப்படுத்தியதோடு, கேலியும் செய்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தை களவாடிவிட்டீர்கள், இவ்வளவு ஆண்டுகளாக உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை உணர்ந்து செயல்படாமல், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறுகிறீர்களே, உங்களுக்கு எவ்வளவு தைரியம் என தைரியமாக உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையிலேயே கர்ஜித்தார் கிரேட்டா.

 

கிரேட்டா ஐ.நா சபை தலைமையகத்திற்குள் நுழைய காத்திருக்கும் நேரத்தில் முந்திக்கொண்டு வேகமாக ட்ரம்ப் நுழைய, அவரை கிரேட்டா முறைத்துப் பார்க்கும் புகைப்படம் வைரலானது.

 

இதற்கிடையில், தனக்கு கிடைக்கவேண்டிய Person Of The Year விருதையும் கிரேட்டா தட்டிப்பறித்துச் செல்ல, கடுப்பான ட்ரம்ப், கிரேட்டாவை கிண்டல் செய்யும் வகையில், கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என கிரேட்டா கற்றுக்கொள்ளவேண்டும், ஒரு நண்பருடன் நல்ல சினிமாவுக்கு செல்லலாம், டென்ஷன் ஆகாதேம்மா, கிரேட்டா, கூலாக இரு என்று ஒரு ட்வீட் போட்டார்.

அமைதியாக காத்திருந்த கிரேட்டாவுக்கு ட்ரம்பை பழிக்குப் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் கிட்டியது.

வாக்குகள் எண்ணுவதில் முறைகேடு நடப்பதாக கூறி கோபமடைந்துள்ள ட்ரம்ப், வாக்குகள் எண்ணுவதை நிறுத்துமாறு ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அதைக் கண்ட கிரேட்டா, தன்னை கேலி செய்ய ட்ரம்ப் எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாரோ, அதே வார்த்தைகளை பயன்படுத்தி அவரை கேலி செய்துள்ளார்.

கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என ட்ரம்ப் கற்றுக்கொள்ளவேண்டும், ஒரு நண்பருடன் நல்ல சினிமாவுக்கு செல்லலாம், டென்ஷன் ஆகாதீர்கள், ட்ரம்ப், கூலாக இருங்கள் என்று ட்ரம்பை கேலி செய்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் கிரேட்டா.

ஆனால், பாவம், தோற்று விடுவோமோ என்ற பயத்தால், கடும் கோபத்தில் இருக்கும் ட்ரம்ப்புக்கு அதைப் பார்ப்பதற்கெல்லாம் நேரம் இருக்குமா தெரியவில்லை!

Related Posts

Leave a Comment