17 வயது பெண்ணை விவாகரத்து செய்ய முடிவு செய்த 78 வயது தாத்தா! திருமணமான 22 நாளிலே கசந்த மண வாழ்க்கை

by Web Team
0 comment

இந்தோனேஷியாவில் 78 வயது நபரை திருமணம் செய்த 17 வயது பெண் குறித்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது இருவரும் விவாகாரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் அபா சர்ணா என்ற 78 வயது முதியவர் நோனி நவிதா என்ற 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 22 நாட்களே ஆன நிலையில், அபா சர்ணா, நோனி நவிதாவை விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த புதுமணத் தம்பதியினர் அவர்களின் வயது வித்தியாசம் காரணமாக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். ஆனால் சில நாட்களுக்குள்ளாகவே அபா விவாகரத்து கடிதத்தை நோனிக்கு அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இருவருக்கு இடையில் எந்தஒரு பிரச்சனையும் இல்லாத போது ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவில்லை.

இது குறித்து நோனியின் சகோதரி ஐயன் கூறுகையில், இருவருக்கும் இடையில் பெரிய சச்சரவுகள் போன்ற எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை.

ஆனால் திடீரென்று இப்படியொரு செயலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆச்சரியம் என்னவென்றால், இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்தபோதிலும் எங்கள் குடும்பத்திற்கு அபா சர்னாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.

இருப்பினும், இந்த பிரச்சினை அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்துள்ளது. அவர்கள் திருமணத்தை எதிர்த்ததாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் நோனி கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டினை நோனி சகோதரி ஐயன் மறுத்துள்ளார். திருமணத்தின் போது அபா ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட், அதுமட்டுமின்றி பணமும் கொடுத்துள்ளார்.

இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வரதட்சணை பொருட்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன.

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment