கொழும்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

by Lankan Editor
0 comment

கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன இன்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என தெரிவிக்கப்பட்டது. இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதீப் யசரட்ண மேலும் கூறியுள்ளதாவது,
“கொழும்பு தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கின் கீழ்காணப் படுகின்றமையால், விநியோக சேவைகள் ஊடாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா அச்சம் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், உலர் உணவு பொதிகள் கிடைக்காத தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், பொலிஸாருக்கோ அல்லது தங்கள் வீடுகளை நாளாந்தம் கண்காணிக்க வருகின்றவர்களுக்கோ தெரிவிக்கலாம். இல்லாவிடில் தொலைபேசி ஊடாக கொழும்பு பிரதேச செயலகத்தை தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான தொலைபேசி இலக்கம் வருமாறு 011 236 9139 பிரதேச செயலாளர் இது தொடர்பாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்தார்.

 

 

Related Posts

Leave a Comment