பிரித்தானியாவில் இன்று முதல் ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடினமாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கை அமுல்படுத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் பிரித்தானியாவில் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து ஜூன் மாதம் முதல் அங்கு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு பின்னர் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதற்கு பிரித்தானியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஊரடங்கு இன்று முதல் அமலாகிறது.
- மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைக்களுக்கு மட்டுமே வெளிய செல்லலாம்.
- பள்ளி, கல்லூரிகள், பணி, உடற்பயிற்சி, மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே செல்லலாம்.
- ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை,
- பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும்.
- பப் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் மூடப்படும்.
- வேலையிழப்பால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஊதியத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.