வீட்டுக்குள் தமிழில் பேச கஷ்டப்படும் சம்யுக்தா! கண்டித்து அனுப்பிய பிக்பாஸ்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க சண்டையும் கூச்சலுமாக இருந்து வருகிறது, போட்டியாளர்களும் அடிக்கடி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.

குறிப்பாக ஆரி, சம்யுக்தா, பாலாஜி இவர்களுக்கு இடையே அவ்வப்போது மோதல் வெடித்து வருகிறது, நேற்று கூட ஆரி விவாதமேடையில் சம்யுகதாவிடம் மிகவும் கடுமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்று ப்ரோமோகளிலும் போட்டியாளர்கள் சண்டையேதுமின்றி ஜாலியாக உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என சம்யுகதாவிடம் கண்டித்து அனுப்பியுள்ளார். ஆனால் அவர் ஆங்கிலத்தை தவிர்க்க முடியாமல் தமிழில் பேச கஷ்டப்படுகிறார்.

Related Posts

Leave a Comment