பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் பிகில் பட நடிகை!?

by Web Team
0 comment

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பரபரப்பாக ஆரம்பித்த பிக்பாஸின் 4-வது சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர்.

முதல் எலிமினேஷனில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். பாடகர் வேல்முருகன் இரண்டாவது ஆளாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். வைல்ட் கார்டு என்ட்ரியில் முதலில் தொகுப்பாளினி அர்ச்சனாவும், இரண்டாவதாக பாடகி சுசித்ராவும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

நேற்று சீரியல் நடிகர் முஹம்மது அஸீம் மூன்றாவதாக வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பது போல உள்ளது. அந்த ஹோட்டல் இதற்கு முன்னர் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டல் போலவேயுள்ளது. எனவே இந்திரஜா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

மேலும் அவர் தனது பதிவில் “நான் விரும்புவதெல்லாம் என் கைகளால் மட்டுமல்ல, என் இதயத்தாலும் மற்ற மனிதர்களின் இதயத்தைத் தொடுவதுதான். பெரிய மற்றும் விலைமதிப்பற்ற விஷயங்கள் அனைத்தும் தனிமையானவை” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment