ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – சோகத்தில் கிராமமக்கள்

by Web Team
0 comment

மத்திய பிரதேசம் மாநிலம் சேதுபுரா கிராமத்தில் உள்ள 3 வயது சிறுவன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் பேட்டு பெற்றோர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததும் பதறியடித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் புல்டோசர் வாகனங்களின் உதவியுடன் மண்ணை தோண்டி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தம் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிறுவன் எத்தனாவது அடியில் சிக்கியிருக்கிறார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சிறுவனின் குரல் கேட்க முடிவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என கிராம மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளியின் போதுதான் திருச்சியில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பெரும் போராட்டம் நடத்தியும் மீட்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. எனவே இது தொடர்பாக தொழில்நுட்பத்துடன் கருவி கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment