அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவின் இமாலய சாதனையை முறியடித்த ஜோ பைடன்

by Web Team
0 comment

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 248 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.

தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பைடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment