நாட்டை முடக்காமல் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் – ஜனாதிபதி

by Lankan Editor
0 comment

வைரஸ் ஒழிப்பிற்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்கிவைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Covid – 19 தொற்றை கட்டுப்படுத்துவது தொட்பான கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரம் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் சமமாக கவனத்திற்கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

.

Related Posts

Leave a Comment