அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நியூயோர்க், வெர்மான்ட் , நியூஜெர்சி – ஜோ பைடன் வெற்றி

by Editor
0 comment

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

2020 ஜனாதிபதித் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பாக வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களாக, குடியரசு கட்சி சார்பாக மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பாக , இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.

இந்த நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 223 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளார். மேலும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 118 இடங்களையும் கைப்பற்றியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் டொனால்ட் ட்ரம்ப் ஓக்லஹாமா, கென்டக்கி, இண்டியானா, டென்னிஸி, மேற்கு வெர்ஜினியா மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment