பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

by Lankan Editor
0 comment

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் இன்று (04) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாய அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை, ஹோகந்தர, மீகொட, வெயாங்கொ​டைத மற்றும் நாரஹேன்பிட்டிய பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், இந்த மத்திய நிலையங்களில் சில்லறை வியாபாரங்கள் இடம்பெற மாட்டாது.

குறித்த மத்திய நிலையங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment