நிர்வாண புகைப்படம் வெளியிட்டு தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்து கூறிக்கொண்ட கார்த்தி பட நடிகர்!

by Web Team
0 comment

நடிகர் மிலிந்த் சோமன் தனது நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிக் கொண்டது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் மாடல் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரும் கூட. கார்த்தியின் பையா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மிலிந்த் சோமன் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் 90 களில் மிலிந்த் சோமன் மாடல் மது சப்ரேவுடன் உடை இல்லாமல் நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மிலிந்த் சோமன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதையடுத்து தான் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுத் தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா கணவருடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதோடு “என் இதயத்தையும் ஆன்மாவையும் கொண்டுள்ள மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் இருப்பின் ஒவ்வொரு மூலக்கூறிலும் நான் உங்களை நேசிக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் நான் உங்களை கொண்டாடுகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment