தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வெற்றி பெற்றது யார்? வெளியான முடிவுகள்

by Web Team
0 comment

தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் அமெரிக்காவின் New Jersey தொகுதியில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி 129 வாக்குகளுடன் ஜோ பைடன் முன்னிலை வகித்து வரும் நிலையில் 94 வாக்குகளுடன் டிரம்ப் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகளவு வசிக்கும் New Jerseyல் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜோ பைடன் கட்சி அங்கு 1,651,702 வாக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது.

டிரம்பின் கட்சி 1,018,309 வாக்குகளை பெற்றுள்ளது.

அங்கு வசிக்கும் தமிழர்களிடையே ஜோ பைடனுக்கு அமோக ஆதரவு இருப்பதை தொடக்கத்தில் இருந்தே காண முடிந்தது.

அங்கு வசிக்கும் குரு (12) என்ற தமிழ் சிறுவன் கூறுகையில், ஜோ பைடனின் கட்சிக்கு தான் என் தந்தை வாக்களிக்க வேண்டும், அவர்கள் தான் நாட்டை முன்னேற்ற முயல்வார்கள் என கூறினார்.

அவரின் சகோதரி ராதிகா கூறுகையில், பைடனுக்கு தான் என் குடும்பத்தார் வாக்களிக்க வேண்டும் எனெனில் துப்பாக்கி கலாச்சாரத்தை அவர் தான் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறார்.

சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ரகு கூறுகையில், ஜோ பைடன் வெற்றி பெறவே நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

முதல் தடவையாக வாக்களிக்கும் ஸ்ரீனிவாச ராமகிருஷ்ணன் என்ற 19 வயது தமிழர் கூறுகையில், என் ஆதரவு டிரம்புக்கு தான், ஏனெனில் அவர் தான் வரிகளை குறைப்பார் என என் பெற்றோர் கூறினார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment