லண்டனில் 26 வயது இளைஞனால் சிறுமிக்கு நடந்த துயரம்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி: நன்றி என கதறி அழுத பரிதாபம்

by Web Team
0 comment

லண்டனில் 26 வயது இளைஞன் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கடந்த சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி7 மணியளவில் இளைஞன் ஒருவனிடம் சிறுமி தனியாக இருப்பதைக் கண்ட பெண் ஒருவர், தன்னிடம் இருந்த கமெராவை வைத்துக் கொண்டே அவரை பின் தொடர்ந்தார்.

அப்போது அவரிடம் சத்தம் போட்டு, யார் நீ? குழந்தை யாரு என்று கேட்க, உடனே அந்த நபர் என்னுடைய உறவினர்கள், குடும்ப சிறுமி என்பது போல் சொல்லிக் கொண்டே செல்ல, உடனே இந்த பெண் அவரை விடாமல் பின் தொடர்ந்து, அந்த குழந்தையிடம் நீ நன்றாக இருக்கிறாயா? உன்னிடம் தான் கேட்கிறேன் என்று கேட்கிறார்.

ஆனால், சிறுமி எந்த பதிலும் கூறாமல் இருந்த நிலையில், குறித்த துணிச்சல் மிக்க பெண், உடனடியாக அந்த நபர் அருகில் செல்ல, உடனே சிறுமியை விட்டுவிட்டு, அவன் அங்கிருந்து தப்பித்து செல்கிறான்.

உடனே அந்த பெண்ணிடம் சிறுமி கதறி அழுகிறார். என்னை காப்பாற்றியதற்கு நன்றி… நன்றி என தொடர்து அழுது கொண்டே கூறுகிறார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவர, பொலிசார் உடனடியாக குறித்த இளைஞன் தானாக வந்துவிடும் படியும், இல்லையென்றால் கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பொலிசார் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

(Picture: Met Police)

அதன் பின் அந்த நபரின் பெயர் Kadian Nelson எனவும் 26 வயது மதிக்கத்தக்கவர் என்றும் பொலிசார் அந்த நபரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இதையடுத்து அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள்தாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் என்பது உறுதியானவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர் முகம் தெரிவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மக்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Picture: Metropolitan Police)

Related Posts

Leave a Comment