பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக டக்கிளஸ் தேவானந்தா நியமனம்

by Lankan Editor
0 comment

பாராளுமன்ற பேரவையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டடுள்ளார்.

பாராளுமன்ற பேரவைக்கு தமது பிரதிநிதியாக அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் பெயரை பிரேரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிற்கு நேற்று( 2) அறிவித்தார்

அதன்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய பாராளுமன்ற சபையின் கட்டமைப்பு மாற்றம் பெறும்.

அதற்கமைய பாராளுமன்ற சபை பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்களாக பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர், சபாநாயகரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்படும் பிரதிநிதி ஒருவரையும் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Comment