இரண்டாம் குத்தா? நீதிபதிகள் வேதனை

by Web Team
0 comment

இரண்டாம் குத்தா? என்று படத்தின் டைட்டிலை பார்த்தே உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனையை தெரிவித்திருக்கிறார்கள். படத்தினை முழுவதுமாக பார்த்திருந்தால் கண்ணீரே விட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

ஆண், பெண் அந்தரங்கத்தை பற்றி இதற்கு முன்பு இத்தனை வெளிப்படையாக எந்த சினிமாவும் வந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு அமைந்திருந்தன ஹரஹர மஹா தேவகியும், இருட்டு அறையில் முரட்டு குத்துவும். இதனால் இந்த இரண்டு படங்களும் வசூலை வாரி குவித்தது.
அதனால் அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்துவின் இரண்டாம் பாகம் என்று, ‘இரண்டாம் குத்து’ படத்தை எடுத்திருக்கிறார் சந்தோஷ். அவரே இப்படத்தின் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த அளவுக்கு ஆபாசமான போஸ்டர்களும், இரட்ட அர்த்த வசனம் உள்ள வீடியோக்களும் இணையங்களில் விரவி இருப்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று பெருமாள் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருகரன் மற்றும் புகழேந்தி இருவரும், ‘’அந்த காலத்து படங்கள் குடும்ப உறவையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் விதமாக இருந்தன. ஆனால் இன்றைக்கு ஆபாசம், வன்முறையை கொண்ட படங்கள்தான் வருகின்றன. பட விளம்பரத்திற்காகவும், விற்பனைக்காகவும் இரட்டை அர்த்த வார்த்தைகளையும் ஆபாசங்களையும் திணிக்கின்றனர்’’என்று வேதனையை தெரிவித்தனர்.

பின்னர், இரண்டாம்குத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தடை செய்யச்சொல்லி கூகுள், பேஸ்புக், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும் படக்குழுவினருக்கும் நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டனர்.

Related Posts

Leave a Comment