இன்று போட்டி மும்பை vs ஹைதராபாத் – ஆனால், அதிக கவலை கொல்கத்தாவுக்கு !

by Web Team
0 comment

ஐபிஎல் 2020 சீசனின் கடைசி லீக் போட்டி இன்று. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொள்கின்றன. ஆனால், இந்தப் போட்டியின் முடிவை மிகுந்த ஆவலோடும், கொஞ்சம் பயத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் பாயிண்ட் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகி விட்டன. அதாவது முதலிடத்தில் மும்பை, இரண்டாம் இடத்தில் டெல்லி, மூன்றாம் இடத்தில் பெங்களூரூவும் உள்ளன.

நேற்று நடந்த டெல்லி vs பெங்களூர் மோதலில் டெல்லி வென்றாலுமே கடைசி வரை போட்டி நடந்ததால், பெங்களுரும் பிளே ஆஃப் செல்ல தகுதி பெற்றது. அதனால், இன்றைக்கு நடக்கும் மும்பை vs ஹைதராபாத் போட்டி முக்கியமானதாக மாறிவிட்டது.

இப்போதைக்கு நான்காவது இடத்தில் 14 புள்ளிகளோடு இருப்பது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். ஐந்தாம் இடத்தில் 12 புள்ளிகளோடு இருப்பது ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ஹைதராபாத் வென்றால், அது பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம்.

ஏனெனில், இன்று வெல்லும்பட்சத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் இரு அணிகளில் புள்ளிகளும் 14 என்பதாகி விடும். ரன்ரேட்டில் ஹைதராபாத் முன்னிலையில் இருப்பதால், அதுவே முன்னேற வாய்ப்பு இருக்கிறது. மாறாக, மும்பை வென்றுவிட்டால், இப்போதைய நிலைபடி நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும்.

அதனால், இன்றைய போட்டியின் முடிவை திகிலோடு எதிர்பார்த்திருப்பது கொல்கத்தாவே.

Related Posts

Leave a Comment