வியன்னாவில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் : சர்வதேச நாடுகள் கண்டனம்

by Lankan Editor
0 comment

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வியன்னாவில் உள்ள 6 பகுதிகளில் துப்பாக்கிதாரிகள் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஆயுததாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி பிரயோகங்களில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்படுள்ளது.

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

Related Posts

Leave a Comment