ஏன் செவ்வாய்க்கிழமை மவுன விரதம் இருக்கணும்..? உங்களுக்கு தெரியுமா!?

by Web Team
0 comment

செவ்வாய் கிழமை மவுன விரதம் மகத்தானது!

முக்கண்ணான மாகதேவனின் அவதாரமான அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாதானவர். இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு. செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள். ஆகையால் செவ்வாய்க் கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை.

செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோயிலில் நவகிரக சன்னிதியில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும். விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மவுன விரதம். தர்ம சாஸ்திரத்தில் மவுன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று மவுனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே மவுனவிரதம்தான். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்துவது மவுன விரதமாகும். மவுனம் மகத்தான சக்தி வாய்ந்தது. பல பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடியது. மவுனவிரதம் இருப்பது நம் உடல், உள்ளத்தை தூய்மையாக்கும். அதிகம் கோபப்படுபவர்கள் மவுனவிரதம் இருந்தால் கோபத்திலிருந்து விடுபடலாம்.

உடலில் உள்ள ஆற்றல்களை ஒன்றிணைக்கும். நம்மைப் பற்றிய ஆய்வுக்கும் சிறந்தது. மவுனவிரதம் இருந்தால், பேசும் நேரங்களில் கூட தேவையற்ற வார்த்தைகள் வராது. பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

உண்ணாநோன்பைக் காட்டிலும் மவுனமாக இருப்பது சிரமம் தான். உண்ணாநோன்பு நம் உடல்நலத்திற்கு முக்கியம் என்றால், மவுன விரதம் நம் மனநலத்திற்கு மிக முக்கியம். மவுனமும் ஒரு தியானம்தான். நம்மை நாம் உணர, நம்மில் இறைவனை உணர மவுனவிரதம் சிறந்த துணை புரியும்.

செவ்வாய் கிரகத்துக்கு முருகப்பெருமான் தனது அதிதேவதையாவர். அவரையும், ராகு காலத்தில் துர்க்கையையும் வழிபட்டு வந்தால், செவ்வரளி மலர் அல்லது கொண்டவர். செண்பக மலர் கொண்டு வழிபட்டால், செவ்வாயின் அருள் பெறலாம்.

செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளையும் பாராயணம் செய்யலாம்.

Related Posts

Leave a Comment