கல்லறைகளில் இருந்த 29 இளம் பெண்களின் சடலங்களை திருடிய நபர் கைது!

by Lankan Editor
0 comment

கல்லறைகளைக் குறித்து நன்கு கற்ற வரலாற்றாளர் ஒருவரது வீட்டில் 29 பொம்மைகள் கிடைத்துள்ளன. அவை பொம்மைகள் மட்டுமே என அவரது பெற்றோர்கள் நினைத்தார்கள். ஆனால் அவை பொம்மைகள் அல்ல என்ற உண்மை தெரியவந்தது.

அந்த 29 பொம்மைகளும், 29 கல்லறைகளிலிருந்து திருடப்பட்ட இளம்பெண்களின் உடல்கள் என தெரியவந்தபோது Anatoly Moskvin (53) என்ற அந்த கல்வியாளரின் பெற்றோர் அதிர்சியடைந்தார்கள்.

கல்லறைகள் குறித்து கற்ற நிபுணரான Moskvin, இளம்பெண்களின் கல்லறைகளைத் தோண்டி, அவற்றிலிருக்கும் பெண்களின் உடல்களை வீட்டுக்கு கொண்டுவந்து, அவற்றிற்கு நன்றாக உடை அணிந்து ,அலங்காம் செய்து தன் படுக்கையறையில் சேமித்து வைத்திருக்கிறார்.

மேலும் ,அவை பதப்படுத்தப்பட்ட உடல்கள் என்பது தெரியவந்த நிலையில் கைது செய்யப்பட்ட Moskvin, மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலை நாடுகளில் கல்லறைகளை சேதப்படுத்துவதும்இ இறந்தவர்களின் உடல்களைக் கையாள்வதும் குற்றம் என்பதால் Moskvin கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தான் திருடிய இளம்பெண்களின் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னபோது மறுத்த Moskvin, கல்லறையில் புதைத்ததோடு அவர்களது வேலை முடிந்துவிட்டது.

அவர்கள் தங்கள் பிள்ளைகளை குளிரில் தவிக்க விட்டிருந்தார்கள், அவர்களை நான் எடுத்து பத்திரமாக வெதுவெதுப்பாக என் அறையில் வைத்திருக்கிறேன் என்று கூறி மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார் Moskvin.

அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய், Moskvinஐ நிரந்தரமாக மன நோய் மருத்துவமனையிலேயே வைக்கவேண்டும் என்று கோரியுள்ளதோடு, தன் மகளின் உடலை வேறொரு கல்லறையில் அடக்கம் செய்து, அதில் தன் மகளின் பெயரை எழுதாமலே வைத்துள்ளார். ஏனெனில்,

Moskvin சிறையிலிருந்து வந்தால் தன் மகள் உடலை மீண்டும் திருடிவிடக்கூடாது என்பதற்காக அந்த பெண் அப்படி செய்துள்ளாராம்.

 

Related Posts

Leave a Comment