இலங்கைக்கே மட்டும் உரித்தான அரியவகை விலங்கு வன்னிக் காட்டில் கண்டுபிடிப்பு!

by Web Team
0 comment

இலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க உயிரினம் தற்பொழுது வன்னிக் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் அண்மையில் வவுனியா – ஓமந்தைக் காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த அரியவகை உயிரினம் முன்னதாக மேற்கு தொடர்ச்சி மலையிலும் காணப்படுவதாக கருதப்படுகின்றது.

எனினும் அங்கு காணப்பட்ட இதுபோன்ற உயிரினங்களை வகைப்பிரித்து ஆய்வு செய்த முடிவில் இது இலங்கைக்கு மட்டும் உரித்தானது என உறுதிப்படுத்தப்பட்டது.

சுமார் 8 செ.மீ நீளமுடைய இந்த தனித்துவம் மிக்க உயிரினம் மற்றைய அனைத்து சகோதர இனங்களிடமிருந்தும் வேறுபட்டது.

உடலின் நடுப்பகுதியில் (22-24) குறைந்த எண்ணிக்கையிலான வரிசைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட முதுகெலும்பு வரிசை செதில்களும் உள்ளன.

இந்த உயிரினம் பல்லேகம, தம்புல்ல, பொலன்னறுவ, பக்கமுன, ஹொரன, அனுராதபுரம், கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட மண்டலத்திலிருந்து அரிதாக அறியப்பட்டவை.

இந்த உயிரினம் அரிதாக காணப்பட்ட நிலையில் 1970 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2 ரூபாய் நாணயத்தாளில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Comment