கொரோனா வைரஸ் தெற்றினால் பாதிக்கப்பட்ட சரவதேச நாடுகளின் பட்டியலில் 110 இடங்களுக்குள் இலங்கை

by Lankan Editor
0 comment

உலகில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் , கடந்த 3 நாட்களில் இலங்கை 3 இடங்கள் முன்னேறி 109 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் உலகில் உள்ள மக்களை அச்சப்பட வைக்கிறது. இந்த நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலகட்டத்தில் வெகுவாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 21 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 130 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, கடந்த வாரத்தில் சடுதியாக முன்னேறி 112 ஆவது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், கடந்த 3 தினங்களில் மேலும் 3 இடங்கள் முன்னேறி 109 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Comment